21 May 2013, 07:41 PM
YORK.N0000 As of 21 May 2013
Last Trade 01:25:19 10.10
Change 0.00 0.00
Volume 300
Today's Open 0.00
Today's High 10.50
Today's Low 10.10
X
Loading....

பங்குச்சந்தை நடவடிக்கைAs of 21 May 2013

பங்குச்சந்தை | -

புரள்வு-பங்குகளின் அளவு-

- - -%
- - -%

வியாபார அமர்வுகள்

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப 9.30 மணி முதல் பி.ப 2.30 மணி தொடர்ச்சியான வியாபார நடவடிக்கைகளுக்காக திறந்திருக்கும்.

உரித்துடமைகளுக்கான வியாபார நேரங்கள் வருமாறு

சந்தை நிலை நேரம் தினங்கள்
பகிரங்க ஏலம் 9:00 - 9:30 திங்கள் - வெள்ளி (பொது வீடுமுறை தினங்கள் தவிர்ந்த)
வழமையான பரிமாற்றம் 9:30 - 14:30
சந்தை நிறைவு 14:30
  •  
  • திறத்த ஏல கோரிக்கை

    பகிரங்க ஏல கோரிக்கை காலப்பகுதியில் (மு.ப 9.00 – மு.ப 9.30) கணினி கட்டமைப்பு கட்டளைகளை ஏற்றுக் கொள்ளும். இந்தக் கட்டளைகள் இக்காலப்பகுதியினுள் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடியதுடன், இரத்துச்செய்யக்கூடிய வசதியும் உண்டு. ஆயினும் எவ்வித வியாபார நடவடிக்கையும் இக்காலப்பகுதியினுள் மேற்கொள்ளப்படாது. இந்த காலப்பகுதியினுள் மேற்கொள்ளப்படும் கட்டடைளகள் தன்னியக்க வியாபார முறைமையில் (யூவுளு) உட்படுத்தப்பட்டு பின்னர் வழமையான வியாபாரத்துக்காக செலுத்தப்படும். மு.ப 9.30 மணிக்கு கணினி கட்டமைப்பு வழிமுறையாக கட்டளைகளை ஒப்பிடும். ஆரம்ப விலையை அணுகி ஆரம்ப ஏல அழைப்பு நேர விதிமுறைகளுக்கு அமைவாக அவற்றை இயக்கும். (தன்னியக்க வியாபார விதி 4)

  • வழமையான பரிமாற்றம்

    வழமையான வியாபார காலப்பகுதியில் (மு.ப 9.30 – பி.ப 2.30) புதிய கோரிக்கைகள் தொடர்ச்சியாக கட்டடளைப் புத்தகத்திலுள்ள கட்டளைகளுடன் ஒப்பிடப்பட்டு, வியாபாரம் பூர்த்தி செய்யப்படும். கட்டளை ஒப்பிட முடியாத நிலை காணப்படின் அது கட்டளைப்புத்தகத்தில் சேமித்து வைக்கப்படும்.

  • சந்தை நிறைவு

    சந்தை நடவடிக்கைகள் பி.ப 2.30 மணிக்கு நிறைவடையும்

  • சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

    S&P ஸ்ரீலங்கா 20  விலைச்சுட்டி (அல்லது எதிர்காலத்தில் S&P ஸ்ரீலங்கா 20  விலைச்சுட்டியை மாற்றீடு செய்யும் பிரிதொரு சுட்டி) 5% க்கும் குறைவான வீழ்ச்சியை எதிர்நோக்குமாயின் சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தம் அனைத்து உரித்துடமை பங்குகளுக்கும் பொருந்தும் வகையில் 30 நிமிடங்களுக்கு மேற்கொள்ளப்படும். இந்த நிலை பி.ப 2.00 மணிக்கு அல்லது அதற்கு பின்னர் ஏற்படுமாயின், சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு, பி.ப 2.30 மணிக்கு நடவடிக்கைகள் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்படும். இந்த முறை 2009 ஜனவரி 2ஆம் திகதி முதல் அமுலில் உள்ளது. சந்தையின் பரந்த சுட்டி அடிப்படையிலான சுற்றமைப்பு பிரிகலன்களின் பங்குச்சந்தைகளின் மூலம் உரித்துடமை பங்குகளின் வியாபாரத்தை இடைநிறுத்தும் உத்தரவு விடுக்கப்படும். இதன் போது அசாதாரணமான சுட்டி போக்கை தணிக்கும் வகையில் இந்த காலப்பகுதி அமைந்திருக்கும். இந்த சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் காலப்பகுதியினுள் நிலுவையிலுள்ள கோரிக்கைகளை இரத்துச்செய்யக்கூடிய சந்தர்ப்பம் முகவர் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். ஆயினும் இந்த காலப்பகுதியினுள் புதிய கோரிக்கைகளை சேர்க்கவோ அல்லது ஏற்கனவே உள்வாங்கப்பட்ட கோரிக்கையில் மாற்றங்களை மேற்கொள்ளவோ முகவர் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது.